link to Home page of 86-06 Edgerton Blvd, Jamaica, NY 11432-2937 - 718 575-3215
The Archives
 
mp3 audio utube

Yethanayo katranaiye
எத்தனையோ கற்றனையே!

You've learned alot

You've learned alot
எத்தனையோ கற்றனையே, இதனைக் கேட்டாயா?
இனிமேலேனும் அமைதியாக இருக்க மாட்டாயா?

tēkamum cittamum uṉatalla teyvattiṉ kaikkaruvi
ēṉō ēkaṉ avaṉ ceyalil kartrutvam eṇṭāṭukiṟāy
ñāṉa kuramaṇaṉ aruḷāl naṭappatellām naṭakka

You have learned a lot, did you listen to this?
At least from now, won’t you be at peace?


நம் புத்திக்கெட்டாததெல்லாம் — நன்றாய்ப்
புரிந்து நடத்துகின்ற — ஒரு
சக்திக்கு விட்டுவிட்டால் — உள்ளத்திற்
சாந்தி நிலைத்து விடும் (எத்தனையோ...)

All that is beyond our intellect’s grasp
Happens well-understood by the One Power
If you leave everything to It
Peace will reign in the heart (You have learned a lot…)

நெஞ்சைப்புண் ணாக்கிக் கொண்டே-நீ
நினைத்து நினைத்துச் செய்யும்-செயல்
கொஞ்சமும் தேவையில்லை — குருவருள்
கொண்டு நடத்துவ தால் (எத்தனையோ...)

Deeds you do through constant thinking
That hurt your own heart
Are utterly unnecessary since
Guru carries it all out through Grace (You have learned a lot…)

மூட்டையை வண்டியில்வை — தலைமேல்
முக்கிச் சுமக்காதே — மனச்
சேட்டையா லாவதில்லை — திருவருட்
சித்தம் நடத்தி வைக்கும்

Put the luggage down while traveling in a vehicle
Don’t struggle carrying it on your head
Nothing happens through mind’s mischief
Divine Grace alone orchestrates

தேகமும் சித்தமுமே — உனதல்ல
தெய்வத்தின் கைக்கருவி — ஏனோ
ஏகன வன்செயலிற் — கர்த்ருத்வம்
எய்தித்திண் டாடுகின்றாய்? (எத்தனையோ...)

Body and mind are not yours
Just handy instruments of God
The One Supreme alone acts
Why do you claim doership and suffer? (You have learned a lot…)

தேகத்தை ‘நான்’எனவே — கொள்ளாமை
செத்துப் பிறவாமை — இவ்வாறு
சாகத் தெரிந்து கொண்டோன் — உண்மையில்
தன்னைத் தெரிந்துகொண்டோன்

To not consider this body as I
Is to die and not be reborn
To know to die thus
Is to know oneself

செய்பவ னாயெழுந்தால் — சுகதுக்கத்
தேட்ட முனைச்சேரும் — பின்னர்
எய்பவ னைவிடுத்தே — அம்பையே
ஏசி வெறுத்துநிற்பாய்

If you rise up as the doer
Pleasure and pain will follow you
Then you will forget the archer
And blame and hate the arrow

உள்ள ஒருவனன்றி — நீதான்
உண்மையி லொன்றுமில்லை — சற்றுங்
கள்ளமில் லாதகத்தை — அவனருட்
கையி லளித்திருப்பாய்

Without the One who alone is
You are really nothing
Your heart free of any guile
Surrender to His hand of Grace

ஈசன ருட்செயலைக் — குறுக்கிட்
டிந்த மனம்தடுக்கும் — இது
நாச மடைந்துவிட்டால் — திருவருள்
ஞானானு பூதிதரும்

This mind will come in the way and block
Deeds done by the Grace of God
If this mind gets destroyed
Divine Grace will bestow realization

தன்னை மறுத்தடங்கு — உடல்மனம்
தானென் றெழாமலிரு — அதன்
பின்னை யிருப்பதெதோ — அதுவே
ப்ரம்ம மெனப்படுமாம்

Deny your ego and subside
Be without taking body and mind as I
Whatever remains after that
Is alone known as Brahman

ஞான குருரமணன் — அருளால்
நடப்பதெல் லாம்நடக்க — உடலக
ஈன வெழுச்சியெழா — விழிப்போ
டிருப்பதே நங்கடனாம்

By the Grace of the wise Guru Ramana
Let all things that happen happen
To not rise up as ‘I am the body’
And to be alert is our only duty